கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கைத்தறி நெசவாளர் நேரடி விற்பனை கண்காட்சி: காஞ்சியில் அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம், டிச.30: காஞ்சிபுரத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கைத்தறி நெசவாளர் நேரடி விற்பனை மற்றும் வர்த்தக கண்காட்சியை அமைச்சர் காந்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மண்டல திமுக நெசவாளர் அணி சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கைத்தறி நெசவாளர் நேரடி விற்பனை மற்றும் வர்த்தக கண்காட்சி தொடக்க விழா காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நெசவாளர் அணி செயலாளர் அன்பழகன் வரவேற்றார். துணை தலைவர் நாகலிங்கம், செயலாளர்கள் நாகராஜன், சிந்து ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு விருந்தினராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கலந்துகொண்டு, கைத்தறி நெசவாளர் நேரடி விற்பனை மற்றும் வர்த்தக கண்காட்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்பி செல்வம், மாநில மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ, மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் கலந்துகொண்டு, திமுக அரசு நெசவாளர்களுக்கு செய்த திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து விரிவாக பேசினர். இக்கண்காட்சியில் கோ -ஆப்டெக்ஸ், ஈரோடு, சேலம், பவானி, மதுரை, திருப்புவனம், ஆரணி, திருப்பத்தூர், கரூர், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கைத்தறி கூட்டுறவு சங்கங்கள், தங்கள் பொருட்களை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில், ₹1,500 முதல் கைத்தறி சேலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், தலைமை பொதுக்குழு சிகாமணி, நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் மலர்மன்னன், மாநகர அமைப்பாளர் பழனி, நெசவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கைத்தறி நெசவாளர் நேரடி விற்பனை கண்காட்சி: காஞ்சியில் அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: