இறுதி அஞ்சலி செலுத்தி ரஜினிகாந்த், கமல்ஹாசன் உருக்கம்

சென்னை: சென்னை தீவுத்திடலில் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் கூறியது: நட்புக்கு இலக்கணம் என்றால் அது விஜயகாந்த் தான். விஜயகாந்த் அன்புக்கு நான் உள்பட அனைவருமே அடிமை. அதனால் தான் அவரை எல்லாருக்கும் பிடிக்கும். நட்புக்கு இலக்கணம் கேப்டன் விஜயகாந்த் தான். ஒருமுறை பழகிவிட்டால் வாழ்க்கை முழுவதும் அதை மறக்கவே முடியாது. அவரது அன்புக்கு வந்து அடிமையாகிவிடுவார்கள். இதனால் தான் அவருக்காக உயிரையே கொடுக்க ரெடியா இருந்தாங்க.. இருக்கிறாங்க. நண்பர்கள் மீதும், அரசியல்வாதிகள் மீதும் ஏன் எங்கள் மீது அவர் கோபப்படுவார். ஆனால் விஜயகாந்த் மீது யாருக்கும் கோபம் இருக்காது. ஏன் என்றால் அவருடைய கோபத்துக்கு பின்னாடி சரியான காரணம் இருக்கும். காலம்தோறும் அவருடன் பழக வேண்டும் என்று மனது சொல்லும். அந்த அளவுக்கு அன்புள்ளம் கொண்டவர். கேப்டன் என்பது விஜயகாந்துக்கு சரியான பெயர். இவ்வாறு ரஜினி கூறினார்.

இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு கமல்ஹாசன் கூறும்போது, ‘எளிமை, நட்பு, பெருந்தன்மை, உழைப்பு, அத்தனையும் விஜயகாந்துக்கு பொருந்தும். ஆரம்பத்தில் நான் பார்க்கும் போது எப்படி பழகினாரோ நட்சத்திரமான பிறகும் அதே மாதிரி பழகினார். அவரது கோபத்துக்கு ரசிகன். அதனால்தான் மக்கள் பணிக்கே அவர் வந்தார். நல்ல நண்பருக்கு விடை கொடுத்துவிட்டு செல்கிறேன்’ என்றார்.

The post இறுதி அஞ்சலி செலுத்தி ரஜினிகாந்த், கமல்ஹாசன் உருக்கம் appeared first on Dinakaran.

Related Stories: