சென்னை: கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்று வருகிறது. விஜயகாந்த் உடலுக்கு அவரது மகன்கள் மற்றும் குடும்பத்தினர் இறுதிச்சடங்குகள் செய்து வருகின்றனர். இன்னும் சிறிது நேரத்தில் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்ய உள்ள நிலையில் ஏராளமான தொண்டர்கள் தேமுதிக அலுவலகம் முன் குவிந்துள்ளனர்.