கடவூர், தோகைமலை ஒன்றியத்தி்ல் சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன பூஜை

தோகைமலை, டிச. 28: கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் நேற்று சிவன் கோயில்களில் நடந்த ஆருத்ரா தரிசன பூஜைகளில் திரளானபக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகள் செய்தனர். இதன் ஒரு பகுதியாக தோகைமலை அருகே ஆர்டிமலை விராச்சிலைஈஸ்வரர் கோயிலில் உள்ள நடராஜருக்கு ஆருத்ரா தரிசனபூஜை நடைபெற்றது. முன்னதாக கோயிலில் உள்ள விரையாச்சிலை ஈஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து நடராஜருக்கு இளநீர், தயிர், பன்னீர், பால், சந்தனம், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், குங்குமம், பழ வகைகள் உள்ளிட்ட 21 திரவியங்கள் மூலம் அபிசேகம் செய்தனர். பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை கான்பிக்கப்பட்டு மஹா அபிசேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து நடராஜர் மீது சாத்தப்பட்டிருந்த சந்தன துகள்களை பக்தர்களுக்கு பிரசாதமாக அளித்தனர். மேலும் சிறப்பு அலங்காரம் செய்யபட்ட நடராஜர் நான்கு மடா வீதிகளில் ஊர்வலமாக வந்தது. அப்போது பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். இதில் மலைகோயில் அர்ச்சகர் கந்த சுப்பிரமணிய சிவாச்சாhpயார், வேதரத்தினசிவம் குருக்கள் ஆகியோர் பூஜைகளை வழி நடத்தினார்கள். இதேபோல் கடவூர் சிவன் கோயில், சின்னரெட்டியப்பட்டி, கழுகூர், இடையப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனபூஜைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளானபக்தர்கள் கலந்து கொண்டு ஆருத்ரா தரிசனத்தில் நடராஜரை வழிபட்டனர்.

The post கடவூர், தோகைமலை ஒன்றியத்தி்ல் சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன பூஜை appeared first on Dinakaran.

Related Stories: