மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,295 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 1,098 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 71.02 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 71.09 அடியாக சற்று உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 33.64 டிஎம்சியாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து 1,500 கனஅடியாக நீடிக்கிறது.
The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,098 கனஅடி appeared first on Dinakaran.