கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதல் அணு உலை அமைக்க இந்தியா-ரஷ்யா ஒப்பந்தம்

மாஸ்கோ: தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதல் அணுஉலை அமைப்பது தொடர்பாக முக்கியமான சில ஒப்பந்தங்களில் இந்தியாவும், ரஷ்யாவும் கையெழுத்திட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்தார். ரஷ்யாவிற்கு 5 நாள் பயணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார்.

அங்கு அவர் இந்திய சமூகம் மத்தியில் பேசும் போது கூறியதாவது: தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எதிர்காலத்தில் கூடுதல் அணு அலகுகள் அமைப்பது தொடர்பான சில மிக முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டோம். கூடங்குளம் அணுமின் நிலையம் ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியுடன் கட்டப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு, அணுசக்தி மற்றும் விண்வெளி போன்ற சில துறைகளில் ரஷ்யா சிறந்த பங்காளி நாடாக உள்ளது. இருநாடுகள் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து நேரில் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு இரு தரப்பும் ஜனவரி இறுதிக்குள் சந்திக்கும். இவ்வாறு தெரிவித்தார்.

The post கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதல் அணு உலை அமைக்க இந்தியா-ரஷ்யா ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Related Stories: