வரத்து குறைவால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை அதிகரிப்பு: அனைத்து காய்கறிகளும் கிலோவுக்கு ரூ.20-25 வரை உயர்வு

சென்னை: வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கோயம்பேடு அங்காடிக்கு தினந்தோறும் 7,000 டன் காய்கறிகள் வந்து கொண்டிருந்த நிலையில் கடந்த சில தினங்களாக 5,000 முதல் 5,500 டன் காய்கறிகள் மட்டுமே வந்துள்ளது. கிருஷ்ணகிரி, ஓசூர், திண்டுக்கல், தேனி, ஒட்டன்சத்திரம், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

இதனால் ஒரு வரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் அனைத்து காய்கறிகளுமே கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ரூ.20க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் ரூ.60க்கும், பீன்ஸ் ரூ.40க்கும், உஜாலா கத்திரிக்காய் ரூ.60 வரையும் விற்கப்படுகிறது. பீர்க்கங்காய், புடலங்காய் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் இன்னும் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி காய்கறிகள் வரத்து அதிகரிக்கும் என்றும் அதன் பின்னரே விலை குறையும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post வரத்து குறைவால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை அதிகரிப்பு: அனைத்து காய்கறிகளும் கிலோவுக்கு ரூ.20-25 வரை உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: