இந்த பணியில் ஐக்கிய அரபு அமீரகம், சீனா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன. செவ்வாய் கிரக ஆராய்ச்சில் அரசுகளின் விண்வெளி கழகங்கள் மட்டுமல்ல, எலான் மஸ்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ போன்ற தனியார் நிறுவனங்களும் களம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளன. 2026ல் மனிதனை செவ்வாய்கிரகத்திற்கு அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கு நகரம் வேண்டும் என மஸ்க் ட்வீட் செய்துள்ளார். 1903ம் ஆண்டு டிசம்பர் 17 அன்று ரைட் சகோதரர்கள் முதன்முதலாக தாங்கள் வடிவமைத்த பறக்கும் விமானத்தில் பறந்தனர் என்று குறிப்பிடப்பட்ட பதிவை பகிர்ந்து மனிதர்கள் நிலவில் தரையிறங்கி 66 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும் இது மனித இனத்தின் உயர்ந்த அடையாளமாக இருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நிலவின் மனிதர்களுக்கு தளமும் செவ்வாய் கிரகத்தில் நகரங்களும் இருக்க வேண்டும் என்றும் விண்மீன்களுக்கு இடையே பயணிப்பவர்களாக மனிதர்கள் இருக்க வேண்டும் என்றும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
The post மனித இனத்திற்கு நிலவில் தளம் இருக்க வேண்டும், செவ்வாய் கிரகத்தில் நகரங்கள் இருக்க வேண்டும் :எலான் மஸ்க் விருப்பம்!! appeared first on Dinakaran.