தேசிய விளையாட்டு விருது 2023 ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா

புது டெல்லி: இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி, தமிழக கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. பேட்மின்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் அசத்தி வரும் நட்சத்திரங்கள் சாத்விக் சாய் ராஜ், சிராக் ஷெட்டி உயரிய மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி, தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி உள்பட 26 பேர் அர்ஜுனா விருது பெற உள்ளனர். சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது லலித் குமார் (மல்யுத்தம்), ஆர்.பி.ரமேஷ் (செஸ்), மகாவீர் பிரசாத் (பாரா தடகளம்), ஷிவேந்திரா சிங் (ஹாக்கி), கணேஷ் பிரபாகர் (மல்லக்கம்பம்) ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது. மஞ்சுஷா கன்வார் (பேட்மின்டன்), வினீத் குமார் (ஹாக்கி), கவிதா செல்வராஜ் (கபடி) வாழ்நாள் சாதனையாளர்களாக கவுரவிக்கப்பட உள்ளனர்.

எண் வீரர்/வீராங்கனை விளையாட்டு
1 முகமது ஷமி கிரிக்கெட்
2 ஆர்.வைஷாலி செஸ்
3 எம்.ஸ்ரீஷங்கர் தடகளம்
4 கோபிசந்த் ஸ்வாமி வில்வித்தை
5 ஓஜஸ் பிரவீன் வில்வித்தை
6 பாருல் சவுதாரி தடகளம்
7 முகமது ஹசாமுதீன் குத்துச்சண்டை
8 அனுஷ் அகர்வாலா குதிரையேற்றம்
9 திவ்யக்ரிதி சிங் குதிரையேற்றம் (டிரெஸ்ஸேஜ்)
10 திக்ஷா தாகர் கோல்ப்
11 பகதூர் பதக் ஹாக்கி
12 புக்ரம்பம் சுஷிலா சானு ஹாக்கி
13 பவன் குமார் கபடி
14 ரீத்து சிங் கபடி
15 நஸ்ரீன் கோ-கோ
16 பிங்கி லான் பவுல்ஸ்
17 பிரதாப் சிங் தோமர் துப்பாக்கிசுடுதல்
18 ஈஷா சிங் துப்பாக்கிசுடுதல்
19 ஹரிந்தர் பால் சிங் ஸ்குவாஷ்
20 ஆயிகா முகர்ஜீ டேபிள் டென்னிஸ்
21 சுனில் குமார் மல்யுத்தம்
22 அன்டிம் மல்யுத்தம்
23 ரோஷிபினா தேவி வுஷு
24 ஷீதல் தேவி பாரா வில்வித்தை
25 இல்லுரி அஜய் குமார் ரெட்டி பார்வையற்றோர் கிரிக்கெட்
26 பிராச்சி யாதவ் பாரா படகு போட்டி

The post தேசிய விளையாட்டு விருது 2023 ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா appeared first on Dinakaran.

Related Stories: