கிறிஸ்துமஸ், புத்தாண்டை வரவேற்க தயாராகும் ஊட்டி வண்ண மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் நட்சத்திர ஓட்டல்கள்

ஊட்டி: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதத்தில் ஊட்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் வண்ண மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.கிறிஸ்துமஸ் விழா வரும் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தன்று ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க நட்சத்திர ஓட்டல்களில் ஆடல், பாடல் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள், சினிமா கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக ஊட்டியில் உள்ள ஓட்டல்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் பூங்காக்களை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், புத்தாண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பெரிய ஓட்டல்களில் முன்பதிவும் ஆரம்பித்துவிட்டது. வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பலர் இவ்விழாக்களில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

The post கிறிஸ்துமஸ், புத்தாண்டை வரவேற்க தயாராகும் ஊட்டி வண்ண மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் நட்சத்திர ஓட்டல்கள் appeared first on Dinakaran.

Related Stories: