வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் ராமநாதபுரத்தை சூழ்ந்த வெள்ளம் வெளியேற்றம்

சிவகிரி: வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் உள்ள ராமநாதபுரம் ஊராட்சி இந்திராகாலனி, ஆதிதிராவிடர் காலனி பகுதிகளை மழை வெள்ளம் சூழ்த்தது. சின்னைவெட்டி குளத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் வேலங்குளத்திற்கு இடையில் அதிகமாக செல்வதால் கால்வாயில் நிரம்பிய தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. காலனி முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு குடியிருக்கும் 20 குடும்பகளைச் சேர்ந்த 56 பேர் சமுதாய நலக்கூடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

சிவகிரி தாசில்தார் ஆனந்த், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜய கணபதி, ரவிச்சந்திரன் (கி.ஊ), யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் சரஸ்வதி, முனியராஜ், ஒன்றிய பொறியாளர் மார்கோனி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மாரிமுத்து, திமுக கிளைச் செயலாளர் மகேந்திரன் மற்றும் ஊராட்சி செயலர் முருகராஜ் ஆகியோர் முகாமில் தங்கி இருப்பவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். கால்வாயில் தண்ணீர் சீராக செல்வதற்கு ஜேசிபி வாகனம் மூலம் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் காலனியை சூழ்ந்த மழை வெள்ளம் வடிய தொடங்கியது.

The post வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் ராமநாதபுரத்தை சூழ்ந்த வெள்ளம் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: