லால்குடியில் ஆதிரை பெருவிழா 50 தவில், நாதஸ்வரம் வாசித்து கலைஞர்கள் இசை சங்கமம்

லால்குடி, டிச.20: லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயிலில் ஆதிரை திருவிழா தொடங்கியது. கோவிலில் 50 தவில் நாதஸ்வர கலைஞர்கள் கலந்து கொண்டு இசை சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. திருச்சி மாவட்டம் லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயிலில் திருவாதிரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. 11 நாட்கள் நடைபெற்று வரும் திருவிழா நேற்று முன்தினம் ஆதிரை பெருவிழா தொடங்கியது. சாமி வீதிஉலா முன்பு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 50 தவில், நாதஸ்வர கலைஞர்கள் கலந்து கொண்டு இசைசங்கம நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து சாமி திருவீதி உலா நடைபெற்றது.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தினமும் இறைவனின் திருநடன காட்சிகளும், சிறப்பு அபிஷேகமும், மண்டகப்படி ஆராதனைகளும், ஆன்மீக சொற்பொழிவுகளும், இன்னிசை பட்டிமன்றங்கள், கலை நிகழ்சிகள் நடைபெற்று வருகிறது. தினசரி சாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. 28ம் தேதி வியாழக்கிழமை நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை சப்தரிஷிஸ்வரர் கோயிலின் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் நித்யா மற்றும் திருப்பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

The post லால்குடியில் ஆதிரை பெருவிழா 50 தவில், நாதஸ்வரம் வாசித்து கலைஞர்கள் இசை சங்கமம் appeared first on Dinakaran.

Related Stories: