அமைச்சர் உதயநிதி டிவிட் பேராசிரியர் விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து செய்திட உறுதியேற்போம்

சென்னை: திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: திராவிட இயக்கக் கொள்கைப் பேராசான்-கலைஞரின் உற்ற நண்பர் – திமுக தலைவரின் வழிகாட்டி – திமுகவின் நீண்டகால பொதுச் செயலாளர் என நம்மையெல்லாம் வார்ப்பித்த இனமான பேராசிரியரின் 102வது பிறந்த நாளான இன்று (நேற்று), அவரது திருவுருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தோம். தன் வாழ்நாள் முழுவதும் ஓரியக்கம் – ஒரே கொள்கை – ஒரே குறிக்கோள் என முன்னுதாரணமாக திகழ்ந்த பேராசிரியர் விட்டுச் சென்ற பணிகளை நாம் தொடர்ந்து செய்திட உறுதியேற்போம். அவரது புகழ் ஓங்கட்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post அமைச்சர் உதயநிதி டிவிட் பேராசிரியர் விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து செய்திட உறுதியேற்போம் appeared first on Dinakaran.

Related Stories: