சிவகாசியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள தெப்பம் நிறைந்து கோயிலுக்குள் புகுந்த மழைநீர்..!!

விருதுநகர்: சிவகாசியில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள தெப்பம் நிறைந்து கோயில் வளாகத்திற்குள் புகுந்தது. இதனால் கோயில் வளாகம் முழுவதும் குளம் போல மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நேற்று முதலே விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வெளியே வரமுடியாமல் முடங்கினர்.

இந்நிலையில், சிவகாசியில் நேற்று பிற்பகல் தொடங்கிய மழை இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது. இதனால் சிவக்சயில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், சிவகாசியில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலில் உள்ள தெப்பம் நிறைந்து கோயில் வளாகத்திற்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் அங்கு வந்த பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், தற்போது மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் கோயிலில் உள்ள மழைநீரை வெளியேற்றும் பணியில் கோயில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கோயிலில் உள்ள மழைநீர் முழுவதும் அகற்றப்பட்ட பிறகு கோயிலில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post சிவகாசியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள தெப்பம் நிறைந்து கோயிலுக்குள் புகுந்த மழைநீர்..!! appeared first on Dinakaran.

Related Stories: