பாரம்பரிய மருத்துவம் வளரஅறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகள் தேவை: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: பாரம்பரிய மருத்துவம் வளர அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகள் தேவை என ஆளுநர் ரவி கூறினார். எண்ணித் துணிக என்ற தலைப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நிகழ்வுகள் நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக ஆயுஷ் மற்றும் பாரம்பரிய மருத்துவர்களுடன் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று கலந்துரையாடினார். இதில் மீரா சுதீர், ஜெயபிரகாஷ் நாராயணன், சையது அமீன், சுதீர், யுவபாரத், ரவீந்தரன் ஆகிய ஆயுஷ் மருத்துவர்கள் நவீன மருத்துவம், நீரிழிவு, புற்றுநோய், நோய்கள் கண்டறிதல் ஆகிய தலைப்புகளில் பேசினர். சிறப்பாக பணியாற்றும் ஆயுஷ் மருத்துவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பரிசு வழங்கினார்.

அப்போது, அவர் பேசியதாவது: பாரம்பரியத்தை மறப்பது மனிதத்திற்கு நல்லதல்ல. ஏராளமான சித்தர்கள், யோகிகள் இந்த மண்ணில் பிறந்துள்ளனர். நவீன மருத்துவம் உடலை இயந்திரமாக பார்க்கிறது. அது பலனளித்தாலும், பக்கவிளைவுகள் இருக்கிறது. ஆனால், பாரம்பரிய மருத்துவம் உடலை முழுமையானதாக பார்க்கிறது. நவீன மருத்துவம் ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்படுகிறது. அதேபோல், பாரம்பரிய மருத்துவத்திற்கும் ஆழமான ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது. ஆயுஷ் அதை செய்யும் என நம்புகிறேன். பாரம்பரிய மருத்துவம் வளர அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகள் தேவை. இதற்கு அவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

The post பாரம்பரிய மருத்துவம் வளரஅறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகள் தேவை: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: