தற்போது பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க தேவையான நிலங்களை கையகப்படுத்த நிர்வாக அனுமதி அளித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதனையறிந்த, ஏகனாபுரம் கிராமமக்கள் பரந்தூர் பசுமைவெளி விமானம் நிலையம் அமைப்பதற்கான நிலங்களை கையகப்படுத்த வெளியிட்டுள்ள அரசாணையை தமிழ்நாடு அரசு ரத்து செய்யக்கோரியும், விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட கோரியும் நேற்று முதல் காலவரையற்று தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிப்பு செய்து வருகின்றனர். இந்நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டு, மீண்டும் 11ம் தேதியான நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஏகனாபுரம் கிராமமக்கள் மீண்டும் தங்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். ஏகனாபுரம் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டுமே வந்துள்ள நிலையில், 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளியில் பயிலும் 117 மாணவ, மாணவிகள் யாரும் வராததால் பள்ளி வளாகமும், வகுப்பறைகளும், வெறிச்சோடி கிடைக்கின்றது.
The post பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் ஏகனாபுரம் மக்கள் புறக்கணிப்பு: வெறிச்சோடிய பள்ளி வளாகம் appeared first on Dinakaran.
