மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக 25,581.18 ஹெக்டர் பரப்பளவில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன: கலெக்டர் அறிவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த வாரம் 2.12.2023 முதல் 5.12.2023 வரை பெய்த மிக அதிக கன மழையினால் அனைத்து வட்டாரங்களிலும் நடப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் மொத்தமாக 25,581.18 ஹெக்டேர் பரப்பளவில் நீரில் மூழ்கியுள்ளன என முதல் நிலை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. வேளாண் பயிர்களில் நெல் 23,877 ஹெக்டேர், பயறு வகை பயிர்கள் 67 ஹெக்டேர், எண்ணெய் வித்துகள் 215 ஹெக்டேர் என மொத்தமாக 24,159 ஹெக்டர் பரப்பளவிலும், தோட்டக்கலை பயிர்களில் பழங்கள் 313 ஹெக்டேர், காய்கறிகள் 269 ஹெக்டேர், பூக்கள் 727.5 ஹெக்டேர், மூலிகை மற்றும் வாசனை பயிர்கள் 112.18 ஹெக்டேர் என மொத்தமாக 1,422.18 ஹெக்டர் பரப்பளவில் நீரில் மூழ்கியுள்ளன.

எனவே 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட பயிர்களை வருவாய் துறை வேளாண் துறை, மற்றும் தோட்டக்கலை துறை கள பணியாளர்கள் உடனடியாக ஒருங்கிணைந்து கூட்டாக கணக்கெடுப்பு செய்து பயிர் சேத அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்பிக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உத்தரவிடப்பட்டு தற்போது பயிர் சேத கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கணக்கெடுப்பு பணியை துரிதப்படுத்தும் விதமாக வேளாண்துறை மற்றும் தோட்டக்கலை துறையில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அனைத்து வட்டாரங்களிலும் கள ஆய்வு பணி கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே திருவள்ளுர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் மிக அதிக கன மழை காரணமாக ஏற்பட்ட பயிர் சேதத்திற்கான உரிய நிவாரணம், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

 

The post மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக 25,581.18 ஹெக்டர் பரப்பளவில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன: கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: