இந்தியாவில் ஹமாஸ் அமைப்புக்கு தடையா?: எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை ஒன்றிய அமைச்சர் மீனாட்சி லேகி மறுப்பு

புதுடெல்லி: கேரள மாநிலம் கண்ணூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுதாகரன் நேற்று முன்தினம் மக்களவையில் “இந்தியாவில் ஹமாஸ் அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிக்கும்படி இஸ்ரேல் அரசு இந்திய அரசிடம் கோரிக்கை ஏதும் வைத்துள்ளதா? அப்படி அறிவிக்கும் திட்டம் ஏதேனும் அரசிடம் உள்ளதா? அப்படியானால் அதன் விவரங்கள், இல்லையெனில் அதற்கான காரணங்கள் என்ன?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதுதொடர்பாக இந்திய வௌியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தில் ஒன்றிய வௌியுறவுத்துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி “ஒரு அமைப்பு சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் கீழுள்ளதா என்பது குறித்து அந்தந்த துறை சார்ந்து முடிவெடுக்க வேண்டும்” என்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்ததாக கடிதம் வௌியாகி உள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஒன்றிய அமைச்சர் மீனாட்சி லேகி, “உங்களுக்கு தவறான தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஹமாஸ் அமைப்புக்கு தடை தொடர்பான எந்தவொரு ஆவணத்திலும் நான் கையெழுத்திடவில்லை. என் பெயரில் பதில் வௌியிட்டுள்ள குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

* தொழில்நுட்ப கோளாறு – வௌியுறவுத்துறை விளக்கம்

வௌியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது, “ஹமாஸ் அமைப்பு தடை குறித்த கேள்விக்கு ஒன்றிய வௌியுறவுத்துறை இணையமைச்சர் வி,முரளிதரன் பதிலளித்துள்ளார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக மற்றொரு வௌியுறவுத்துறை இணையமைச்சர் மீனாட்சி லேகியின் பெயர் வந்துள்ளது. தற்போது அது திருத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

The post இந்தியாவில் ஹமாஸ் அமைப்புக்கு தடையா?: எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை ஒன்றிய அமைச்சர் மீனாட்சி லேகி மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: