மும்பை: பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு மற்றும் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்திய வங்கிகள் சங்கம் அதன் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், 17 சதவீத ஊதிய உயர்வு வழங்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு ரூ.12,449 கோடி செலவாகும். இந்த ஊதிய உயர்வு 5 ஆண்டுகளுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், உயர்த்தப்பட்ட ஊதிய விகிதமானது 2022 நவம்பர் மாதம் முதல் முன் தேதியிட்டு நடைமுறைக்கு வரும் என்றும், 12 மாதங்களுக்கான நிலுவைத் தொகை ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3.8 லட்சம் அதிகாரிகள் உட்பட சுமார் 9 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள்.
The post வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத ஊதிய உயர்வு: 9 லட்சம் பேர் பயனடைவர் appeared first on Dinakaran.
