ஹமாஸ் அமைப்புக்கு தடை என எந்த ஒப்புதலும் நான் அளிக்கவில்லை: ஒன்றிய இணையமைச்சர் மீனாட்சி லேகி பதிவு

டெல்லி: ஹமாஸ் அமைப்புக்கு தடை என எந்த ஒப்புதலும் நான் அளிக்கவில்லை என்று ஒன்றிய இணையமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பு குறித்த பதில் தமது ஒப்புதல் இன்றி வெளியாகியுள்ளதாக மீனாட்சி லேகி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் ஹமாஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்படுமா என மக்களவையில் கேரள எம்பி கேள்வி எழுப்பியிருந்தார். கேரள எம்பி சுதாகரனின் கேள்விக்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி சார்பில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருந்தார். ஒரு அமைப்பு சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ளதா என்பதை அந்தந்த துறை சார்ந்து முடிவெடுக்க வேண்டும் என பதில் அளித்திருந்தார்.

The post ஹமாஸ் அமைப்புக்கு தடை என எந்த ஒப்புதலும் நான் அளிக்கவில்லை: ஒன்றிய இணையமைச்சர் மீனாட்சி லேகி பதிவு appeared first on Dinakaran.

Related Stories: