2வது நாளாக உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில் ₹65.14 லட்சம் மொத்தம் ₹3.77 கோடி, 431 கிராம் தங்கம் கிடைத்தது அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலை, டிச.9: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழா உண்டியல் காணிக்கை 2வது நாளாக நேற்று எண்ணப்பட்டது. அதில், ₹65.14 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அதன்படி தீபத் திருவிழாவில் பக்தர்கள் ₹3.77 கோடி, 431 கிராம் தங்கம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்திருப்பது தெரியவந்துள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணுவது வழக்கம். அதன்படி, கார்த்திகை தீபத் திருவிழா நிரந்தர மற்றும் தற்காலிக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்ததுஅப்போது, ₹3.12 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 340 கிராம் தங்கம், 1895 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இந்நிலையில், இரண்டாவது நாளாக கோயில் உண்டியல் காணிக்கை என்னும் பணி நேற்று நடந்தது. அதில், ₹65.14 லட்சம் மற்றும் 91 கிராம் தங்கம், 465 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் செலுத்தி இருந்தனர். அதன்படி, தீபத் திருவிழா உண்டியல் காணிக்கை கடந்த இரண்டு நாட்களில் எண்ணப்பட்டது அடிப்படையில், மொத்தம் ₹3 கோடி 77 லட்சத்து 75 ஆயிரத்து 963 மற்றும் 431 கிராம் தங்கம், 2360 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் செலுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வரலாற்றில், இதுவரை ஒரு மாதத்தில் அதிகபட்சமாக உண்டியல் காணிக்கையாக, இந்த ஆண்டு தீபத் திருவிழாவில் ₹3.77 கோடியை பக்தர்கள் செலுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதன் எதிரொலியாக உண்டியல் காணிக்கை அதிகரித்திருக்கிறது.

The post 2வது நாளாக உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில் ₹65.14 லட்சம் மொத்தம் ₹3.77 கோடி, 431 கிராம் தங்கம் கிடைத்தது அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: