மிசோரம் முதல்வராக லால்துஹோமா பதவிஏற்பு

அய்சால்: மிசோரம் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 27 இடங்களில் ஜோரம் மக்கள் இயக்கம் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் லால்துஹோமா நேற்று முதல்வராக நேற்று பதவி ஏற்றார். ராஜ்பவனில் நடைபெற்ற இந்த விழாவில் ஆளுநர் ஹரிபாபு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தொடர்ந்து அந்த கட்சியை சேர்ந்த 11 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். இவர்களில் 7 பேர் கேபினெட் அமைச்சராக பதவியேற்றனர்.

The post மிசோரம் முதல்வராக லால்துஹோமா பதவிஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: