3 மாநில முதல்வரை தேர்ந்தெடுப்பதில் தாமதம் பாஜ மேலிட பார்வையாளர்கள் நியமனம்

புதுடெல்லி: நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வசப்படுத்திய பாஜ மத்தியப்பிரதேசத்தில் மீண்டும் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையிலும் பாஜ வெற்றி பெற்ற 3 மாநிலங்களிலும் முதல்வர் யார் என்பது இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் 3 மாநில முதல்வரை தேர்ந்தெடுக்கும் வகையில் மேலிட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , சரோஜ் பாண்டே மற்றும் வினோத் தாவ்டே ஆகியோர் ராஜஸ்தான் மாநில பார்வையாளர்களாக அனுப்பப்படுவார்கள். இதேபோல் ம.பிக்கு அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், கே. லட்சுமணன் மற்றும் ஆஷா லக்ரா ஆகியோரும், சட்டீஸ்கருக்கு ஒன்றிய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, சர்பானந்த சோனோவால், பாஜ பொது செயலாளர் துஷ்வந்த் குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post 3 மாநில முதல்வரை தேர்ந்தெடுப்பதில் தாமதம் பாஜ மேலிட பார்வையாளர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: