பாசிப்பருப்பு போண்டா

தேவையானவை:

பாசிப்பருப்பு – 1 கப்,
துருவிய சுரைக்காய் – அரை கப்,
துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 1 டேபிள்ஸ்பூன்,
கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன்,
மல்லித்தழை – சிறிது,
உப்பு -ருசிக்கேற்ப,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள். அதனுடன்துருவிய பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய், மல்லித்தழை சேருங்கள். சுரைக்காயை நன்கு பிழிந்து பருப்போடுசேர்த்து, உப்பையும் போட்டு நன்கு கலந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து சிறு சிறுபோண்டாக்களாக கிள்ளிப் போட்டு, நன்கு வெந்ததும் அரித்தெடுங்கள்.

The post பாசிப்பருப்பு போண்டா appeared first on Dinakaran.