வெங்காயத்தின் விலையை கணிசமாக குறைக்க நடவடிக்கை.. 2024 மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது ஒன்றிய அரசு..!!

டெல்லி: 2024 மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்திருக்கிறது. கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை கணிசமாக அதிகரித்து உள்ளது. சில்லறை விலையில் டெல்லியில் ஒரு கிலோ ரூ. 55 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது. இதற்கு முன்பு வெங்காயத்தின் விலை ரூ.25 முதல் ரூ.30 வரை இருந்து வந்த நிலையில் தற்போது இருமடங்காக உயர்ந்துள்ளது.

எனவே வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் கொண்டுவரவும், உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விநியோகத்தை அதிகரிக்கவும் ஒன்றிய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இருப்பினும் பிற நாடுகளில் இருந்து வரும் கோரிக்கையின் அடிப்படையில் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வெங்காய ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு 40% வரி விதித்திருந்தது. இருப்பினும் வெங்காயத்தின் விலை கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. இந்நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.

The post வெங்காயத்தின் விலையை கணிசமாக குறைக்க நடவடிக்கை.. 2024 மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது ஒன்றிய அரசு..!! appeared first on Dinakaran.

Related Stories: