அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: ஏற்பாடுகள் தீவிரம்; விஐபிக்கள் மட்டுமே 3 ஆயிரம் பேர்

அயோத்தி:மத்தியில் ஆளும் பாஜ அரசின் முக்கிய இலக்கு ராமர் கோயில். மக்களவை தேர்தலுக்கு முன்பாக திறப்பு விழா நடத்தி கவனத்தை ஈர்க்க திட்டமிட்டுள்ளனர். வரும் ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேக நிகழ்விற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதையொட்டி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரம் வேகமாக தயாராகி வருகிறது. கும்பாபிஷேகம் விழா ஏற்பாட்டிற்கு கோயில் நிர்வாகம் தீவிரமாக தயாராகி வருகிறது. இதையொட்டி அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு நேரில் சென்று அளிக்கப்பட்டு வருகிறது. இதில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில் விஐபிக்கள் மட்டுமே 3 ஆயிரம் பேர் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் விஐபிக்கள் சிலரது பெயர்கள் வெளியாகி பெரிதும் கவனம் ஈர்த்து வருகிறது. மேலும் 4 ஆயிரம் குருமார்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், விஞ்ஞானிகள், இந்தியாவின் பல்துறை நிபுணர்கள் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி துறவிகள், சாமியார்கள், முன்னாள் சிவில் சர்வீஸ் அதிகாரிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், வழக்கறிஞர்கள், இசையமைப்பாளர்கள், பத்ம விருது வென்றவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான அழைப்பிதழை ராமர் கோயில் ட்ரஸ்ட் அனுப்பி வைத்திருக்கிறது. குறிப்பாக 50 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் அழைக்கப்பட உள்ளனர். தவிர ராமர் கோயில் இயக்கத்திற்காக தொடர்ந்து போராடி தங்கள் உயிரை தியாகம் செய்த கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

The post அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: ஏற்பாடுகள் தீவிரம்; விஐபிக்கள் மட்டுமே 3 ஆயிரம் பேர் appeared first on Dinakaran.

Related Stories: