சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ.561.29 கோடி விடுவிப்பு: அமித்ஷா உத்தரவு

சென்னை: சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ.561.29 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மூன்றாவது பெரிய வெள்ளத்தை சென்னை எதிர் கொள்வதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். தேசிய பேரிடர் மீட்பு நிதியத்தின் கீழ் சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்திற்காக ரூ.561.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. சென்னை பேசின் திட்டத்திற்கான ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெள்ள மேலாண்மை திட்டத்தின் மூலம் வெள்ளத்தை தாங்கக்கூடிய வகையில் சென்னை மாறும் என அமித்ஷா கூறியுள்ளார்.

The post சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ.561.29 கோடி விடுவிப்பு: அமித்ஷா உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: