காஞ்சி.-செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 58 ஏரிகள் நிரம்பியது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக பெய்துவரும் கனமழையின் காரணமாக மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. காஞ்சிபுரம் மாதா கோயில் தெரு, தாமல்வார் தெரு, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு, ரங்கசாமி குளம், இரட்டை மண்டபம், பெரியார் நகர், விளக்கடி பெருமாள் கோவில் தெரு பகுதிகளில் மழைநீர் செல்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து கால்வாய் மூலம் நீர்வரத்து வந்துக்கொண்டு இருக்கிறது. உள்ளாவூர் மதகுஏரி, காம்மராஜபுரம் ஏரி, பழைய சீவரம் அருக்கேன்டாண் ஏரி, கரூர் தண்டலம் ஏரி, கட்டவாக்கம் ஏரி, புத்தேரி கோவிந்தவாடி சித்தேரி, பெரிய கரும்பூர் மதகு ஏரி, சக்கரவர்த்தி தாங்கள், கூரம் சித்தேரி, தாமல் கோவிந்தவாடி பெரிய ஏரி, தாமல் சக்கரவர்த்தி ஏரி, தாமல் சித்தேரி, கோவிந்தாவாடி பெரிய ஏரி, வேளியூர் பெரிய ஏரி, வெளியூர் சித்தேரி ஆகிய வெங்கச்சேரி, பழைய சிவரம் உள்ளிட்ட 579 சிறிய ஏரிகள் கொள்ளளவை எட்டியுள்ளது.

காஞ்சிபுரம் பகுதியில் 381- ஏரிகள் இருக்கிறது. இதில் மேற்கூறிய 100%-149- ஏரிகள் நிரம்பியது. 65- ஏரிகள் 75- சதவீதம் நிரம்பியது. 108-ஏரிகள் 50 சதவீதமும் 59- ஏரிகள் சதவீதமும் 25% எட்டி உள்ளது. அதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளில் 430-ஏரிகள் 100%, 259-ஏரிகள் 75 சதவீதமும், 18- ஏரிகள் 50 சதவீதமும், 16- ஏரிகள் 25% நிரம்பி உள்ளன.

மேலும் குடிநீர் ஆதாரமாகவும் விவசாயத்துக்கு நீர் பாசனத்திற்கு இந்த பயன்பாட்டுக்கு உகந்த பெரிய ஏரிகளான தாமல், பெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், தென்னேரி, மணிமங்கலம், உத்திரமேரூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய ஏரிகளான ஏரி, செங்கல்பட்டு-கொளவாய், தையூர், மானாமதி, கொண்டங்கி, போன்ற ஏரிகளும் வேகமாக நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 15-பெரிய ஏரிகளில் 11 ஏரிகள் நிரம்பி உள்ளன. நேற்று ஒரே நாளில் 58 ஏரிகள் நிரம்பி உள்ளன.

The post காஞ்சி.-செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 58 ஏரிகள் நிரம்பியது appeared first on Dinakaran.

Related Stories: