திருப்பதியில் மலையப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை மாதத்தையொட்டி நேற்று கார்த்திகை வனபோஜன உற்சவம் நடைபெற்றது. வழக்கமாக பார்வேட்டை மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சி மழை காரணமாக வைபவ உற்சவ மண்டபத்தில் நடந்தது. அங்கு தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.

கார்த்திகை வனபோஜன உற்சவம் தாலபாக்க அன்னமாச்சாரியாவின் பெரிய மகன் திருமலாச்சாரி 16ம் நூற்றாண்டில் இந்த உற்சவத்தை ஏழுமலையான் கோயிலில் நடத்தியதாக சரித்திர ஆதாரங்கள் தெரிவிக்கின்றது.

The post திருப்பதியில் மலையப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் appeared first on Dinakaran.

Related Stories: