மபி சட்டப்பேரவை தேர்தலில் குலாஸ்தே நிவாஸ் தோல்வி

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்லா மாவட்டத்தில் உள்ள நிவாஸ் (எஸ்.டி) தொகுதியில் ஒன்றிய அமைச்சர் பக்கன் சிங் குலாஸ்தே போட்டியிட்டார். அவர் 9,723 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் செயின்சிங் வர்கடேவிடம் தோல்வியடைந்தார். நிவாஸ் தொகுதியில் மூன்று முறை போட்டியிட்ட அவர் 1990ல் மட்டுமே வெற்றி பெற்றார்.

ம.பி. தேர்தலில் பாஜ வேட்பாளர் கோபால் பார்கவா 9வது முறை வெற்றி
மத்தியபிரதேச தேர்தலில் பாஜ வேட்பாளர் கோபால் பார்கவா(71) தெஹ்லி தொகுதியில் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி பட்டேலை 78,200 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து 9வது முறையாக வெற்றியை பதிவு செய்துள்ளார்.

1985 முதன்முதலில் ரெஹ்லி தொகுதியில் போட்டியிட்ட கோவால் பார்கவா, கடந்த 38 ஆண்டுகளில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தொடர் வெற்றி பெற்று யாராலும் வெல்ல முடியாதவராக அரசியல் வாழ்க்கையை தொடர்கிறார்.

The post மபி சட்டப்பேரவை தேர்தலில் குலாஸ்தே நிவாஸ் தோல்வி appeared first on Dinakaran.

Related Stories: