பாஜ வெற்றிக்கு காரணம் மோடியின் பிரசாரமே

மபியில் வெற்றி குறித்து அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், ‘‘மபி மக்களின் இதயங்களில் பிரதமர் மோடி இருக்கிறார். பிரதமரின் இதயத்திலும் மபி மாநிலம் உள்ளது. அவர் மீது மபி மக்கள் அபார நம்பிக்கை வைத்துள்ளனர். இங்கு பிரதமரின் பிரசாரத்தின் போது அவர் மக்களிடம் வேண்டுகோள் வைத்தது, மக்களின் மனதை கவர்ந்துள்ளது. இதன் விளைவாக வெற்றி கிடைத்துள்ளது. எங்களின் வெற்றிக்கு ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் அபாரமான உத்தியும், தேசிய தலைவர் நட்டாவின் வழிகாட்டுதலும், மற்ற தலைவர்கள், தொண்டர்களின் அயராத உழைப்பும் காரணம்’’ என்றார்.

The post பாஜ வெற்றிக்கு காரணம் மோடியின் பிரசாரமே appeared first on Dinakaran.

Related Stories: