தேர்தல் ஆணையம் கெடுபிடி இம்ரான் கான் கட்சிக்கு புதிய தலைவர் நியமனம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான்(71) பல்வேறு ஊழல் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் கிரிக்கெட் மட்டை சின்னத்தை தொடர்ந்து தக்க வைத்து கொள்ள உள்கட்சி தேர்தலை நடத்தி 20 நாட்களுக்குள் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்படி தேர்தல் ஆணையம் கெடு விதித்திருந்தது. இதையடுத்து இம்ரான் கானுக்கு மிகவும் நெருக்கமானவரும், அக்கட்சியின் சட்டக்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் கோஹர் அலி கான்(45) இம்ரான் கான் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

The post தேர்தல் ஆணையம் கெடுபிடி இம்ரான் கான் கட்சிக்கு புதிய தலைவர் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: