இந்திய தொழில் கூட்டமைப்பு வழங்கியது தமிழ்நாட்டுக்கு விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் விருது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி

சென்னை: இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பாக, 2023க்கான விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் என்ற பட்டத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெற்றிருப்பதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் 2023க்கான ‘விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்த அங்கீகாரம், தமிழகத்தில் விளையாட்டு சாம்பியன்களை உருவாக்கி வளர்ப்பதற்கு திராவிட மாடல் அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஒரு சான்றாகும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முயற்சிகளை அங்கீகரித்ததற்காக இந்திய தொழில் கூட்டமைப்புக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில் மற்றும் விளையாட்டு துறை சார்ந்த ஸ்கோர்க்கார்ட் கருத்தரங்கத்தின் 8வது பதிப்பு டெல்லியில் நாளை நடக்கிறது. இதில்,விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் என்ற விருதை வழங்கவுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post இந்திய தொழில் கூட்டமைப்பு வழங்கியது தமிழ்நாட்டுக்கு விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் விருது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி appeared first on Dinakaran.

Related Stories: