அமலாக்கத்துறை அதிகாரி ைகதை அரசியலாக்க கூடாது: அண்ணாமலை சொல்கிறார்

புதுக்கோட்டை: லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைதை அரசியல் ஆக்கக் கூடாதுஎன்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு நேற்று காலை வந்த தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: அமலாக்கத்துறையில் ஒருவர் தவறு செய்தார் என்பதற்காக அந்தத் துறையே சரியில்லை என கூறிவிட முடியாது. தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். அமலாக்கத்துறை அதிகாரி கைதை அரசியல் ஆக்கக் கூடாது.

திருச்செந்தூர் கோயிலில் மின்சாரம் தாக்கி பக்தர் உயிரிழந்த சம்பவத்திற்கு கோயில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே காரணம். தற்போது பதவியில் இருக்கும் மாலத்தீவு அதிபர் இந்திய எதிர்ப்பு அரசியல் செய்து வருகிறார். இதனால் தருவைகுளம் மீனவர்களின் படகுகளை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் படகுகளை மீட்க ஒன்றிய அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்கும் என்றார்.

The post அமலாக்கத்துறை அதிகாரி ைகதை அரசியலாக்க கூடாது: அண்ணாமலை சொல்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: