இந்த மண்டல சீசனில் கடந்த இரு தினங்களாக பக்தர்கள் வருகை மிக அதிகமாக காணப்பட்டது. நேற்று முன்தினம் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் 85,318 பக்தர்கள் முன்பதிவு செய்து இருந்தனர். இவர்களில் அன்று இரவு வரை 84 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். உடனடி முன்பதிவு கவுண்டர்கள் மூலம் முன்பதிவு செய்த 15 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும் தரிசனம் செய்தனர்.
எனவே மொத்தமாக நேற்று முன்தினம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலையில் குவிந்ததை தொடர்ந்து அதிகாலை முதல் இரவு வரை 18ம் படி முன்பு பக்தர்களின் நீண்ட வரிசை காணப்பட்டது. இதனால் நிலக்கல்லில் இருந்தே பக்தர்கள் சன்னிதானம் செல்வது கட்டுப்படுத்தப்பட்டது. நேற்றும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் தரிசனத்திற்கு 12 மணி நேரத்திற்கு மேல் ஆனது.
The post ஒரே நாளில் 1 லட்சம் பேர் குவிந்தனர்; சபரிமலையில் 12 மணி ேநேரத்திற்கு மேல்காத்திருந்த பக்தர்கள் appeared first on Dinakaran.
