அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பாக அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதம்தோறும் ரூ.3500ம், மருத்துவப்படி ரூ.500 என ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், அகவை முதிர்ந்த தமிழ் சான்றோர்களுக்கு அரசு பஸ்களில் கட்டணமில்லா பயண சலுகையும் வழங்கப்படுகிறது.

உதவித்தொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்குப் பின்னர், அவரின் மரபுரிமையருக்கு, அவர்தம் வாழ்நாள் முழுவதும் ரூ.2500 மற்றும் மருத்துவப்படி ரூ.500 வழங்கப்படுகிறது. அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்களிடம் இருந்து 2023-24ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்ப படிவத்தை மண்டல, மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை மற்றும் உதவி இயக்குநர் அலுவலகத்திலேயே நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் வரும் 31.12.2023க்குள் அந்தந்த மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை அலுவலங்களுக்கு வந்து சேர வேண்டும்.

The post அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: