கொரோனா தொற்றுக்கு பிறகு இந்தியாவில் ரயில் பயணிகள் எண்ணிக்கை குறையவில்லை: ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி

லக்னோ: கொரோனா தொற்றுக்கு பிறகு இந்தியாவில் ரயில் பயணிகள் எண்ணிக்கை குறையவில்லை என்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பின் 2021, டிசம்பரில் ரயில் சேவையை ரயில்வேதுறை மீண்டும் தொடங்கியது. 2024 ஜூலை வாக்கில் ரயில் சேவை முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது. 2022-23 நிதியாண்டில் 640 கோடி பயணிகள் ரயிலிகளில் பயணம் செய்தனர்.

இவ்வாண்டு ரயில் பயணிகள் 650 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் 750 கோடி வரை ரயில் பயணிகள் இருக்கின்றனர். கொரோனாவுக்கு முன்பு பயணிகள் எண்ணிக்கை 700 கோடியாக இருந்தது. அந்த எண்ணிக்கை இவ்வாண்டு மிஞ்சிவிட்டது என்று தெரிவித்தார். தொடர்ந்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், மீரட்டில் இருந்து லக்னோ மற்றும் பிரயாக்ராஜ் வரை ரயில் சேவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. முழு சாத்தியக்கூறு ஆய்வு முடிந்து, விரைவில் ரயில் இயக்கப்பட உள்ளது. தற்போது கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

மீரட்-பிஜ்னூர்-ஹஸ்தினாபூர் ரயில் சேவைக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டத்திற்காக, ஆய்வு நடந்து வருகிறது. வரலாற்று முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, மீரட்டில் இருந்து ஹஸ்தினாபூர் வழியாக பிஜ்னூர் செல்லும் ரயிலுக்கான டிபிஆர் தயார் செய்யப்பட்டுள்ளது. நான் இன்று அதை மறுபரிசீலனை செய்வேன். மீரட்டின் கிராந்தி பூமி ரயில் நிலையத்தை எப்படி உலகத் தரம் வாய்ந்த நிலையமாக மாற்றுவது என்பதையும் ஆய்வு செய்வேன். வடிவமைப்பு விரைவில் வெளிவரும் என்று குறிப்பிட்டார்.

The post கொரோனா தொற்றுக்கு பிறகு இந்தியாவில் ரயில் பயணிகள் எண்ணிக்கை குறையவில்லை: ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: