காட்பாடி வழியாக செல்லும் ரயில்கள் தாமதம் பயணிகள் அவதி திருவலத்தில் பராமரிப்பு பணி

வேலூர், நவ.30: திருவலத்தில் பராமரிப்பு பணி காரணமாக காட்பாடி வழியாக செல்லும் ரயில்கள் தாமதமாக சென்றதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர். காட்பாடி அடுத்த திருவலம் ரயில்வே ஸ்டேஷன் அருகே நேற்று காலை சுமார் 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிக்னல் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக வேலூர் கண்டோன்மெண்டில் இருந்து அரக்கோணம் செல்லும் விரைவு ரயில், கோவை- சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மைசூர்-சென்னை எக்ஸ்பிரஸ், பெங்களூர்- தானாபூர் எக்ஸ்பிரஸ், மங்களூர்- சென்னை எக்ஸ்பிரஸ், தானாபூர்- பெங்களூர் சூப்பர் பாஸ்ட், சென்னை- ஷீரடி எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை காட்பாடி வழியாக காலதாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருவலத்தில் காலை 10 மணிக்கு முன்பாகவே சிக்னல் பராமரிப்பு பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் சென்னையில் இருந்து காட்பாடி வழியாக கோவை செல்லும் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு தாமதமாக காட்பாடிக்கு வந்தது. இதனால் பயணிகள் கடுமையாக அவதிக்கு ஆளாகினர்.

The post காட்பாடி வழியாக செல்லும் ரயில்கள் தாமதம் பயணிகள் அவதி திருவலத்தில் பராமரிப்பு பணி appeared first on Dinakaran.

Related Stories: