நடுவானில் கணவன்-மனைவிக்குள் அடிதடி டெல்லியில் தரையிறங்கிய பாங்காக் விமானம்

புதுடெல்லி: ஜெர்மனி நாட்டின் முனிச் நகரிலிருந்து பாங்காக் நோக்கி லூப்தான்சா நிறுவன விமானம் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அதில் ஜெர்மனியை சேர்ந்த 53 வயதுள்ள ஆண் பயணியும், தாய்லாந்தை சேர்ந்த அவரது மனைவியும் பயணித்தனர். நடுவானில் விமானம் பறக்கும்போது இருவருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த விமானி விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க டெல்லி இந்திரா காந்தி விமான நிலைய கட்டுப்பாடு அதிகாரிகளை தொடர்பு கொண்டார். அதையடுத்து விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. அங்கு இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை ஜெர்மன் பயணியை ஓய்வறைக்கு அழைத்து சென்றனர். அவர் குறித்து டெல்லி ஜெர்மன் தூதரக அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தனி டிக்கெட்டில் பயணித்த மனைவி அவர் விருப்பப்படி அதே விமானத்தில் பாங்காங் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

The post நடுவானில் கணவன்-மனைவிக்குள் அடிதடி டெல்லியில் தரையிறங்கிய பாங்காக் விமானம் appeared first on Dinakaran.

Related Stories: