மருத்துவ மேற்படிப்பு நீட் தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண் குறைப்பால் மருத்துவக் கல்லூரிகளுக்கு லாபம்: ஆய்வில் அம்பலம்

டெல்லி: மருத்துவ மேற்படிப்பு நீட் தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண் குறைப்பால் மருத்துவக் கல்லூரிகளே லாபம் அடைந்திருப்பது ஆய்வில் அம்பலமாகியுள்ளது. தனியார் கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ.80 லட்சம் வரை கட்டணம் செலுத்த வசதி உள்ளவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரவே கட்-ஆஃப் மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு மருத்துவ மேற்படிப்பு நீட் கட்-ஆஃப் மதிப்பெண்களை பூஜ்ஜியமாக ஒன்றிய அரசு குறைத்தது.

மருத்துவ மேற்படிப்பு நீட் தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண் குறைப்பால் தனியார் மருத்துவக் கல்லூரிகளே லாபம் அடைந்திருப்பது ஆய்வில் அம்பலமானது. நீட் கட்-ஆஃப் மதிப்பெண் குறைப்பால் 2020-ல் 67% இடங்களும் 2021-ல் 68% இடங்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிரம்பியுள்ளன. மருத்துவ மேற்படிப்பு நீட் கட்-ஆஃப் அதிகமாக இருந்தபோதே, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 80-90% இடங்கள் நிரம்பி வந்தன.

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 4 35,000 எம்.டி., எம்.எஸ். படிப்புக்கான இடங்கள் உள்ளன. எம்.டி., எம்.எஸ். படிப்புக்கான நீட் தேர்வை எழுதிய 1.6 லட்சம் பேரில் 5 96,000 பேர் படிப்பில் சேரத் தேவையான மதிப்பெண்களைப் பெற்றனர்

The post மருத்துவ மேற்படிப்பு நீட் தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண் குறைப்பால் மருத்துவக் கல்லூரிகளுக்கு லாபம்: ஆய்வில் அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: