சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை காரணமாக 27 விமானங்கள் தாமதம்..!!

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழை காரணமாக 27 விமானங்கள் தாமதமாகியுள்ளன. சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ச்சியாக காலை முதலே மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை விமான நிலையம், மீனம்பாக்கம், பல்லாவரம், குன்றத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. சென்னையில் இருந்து புறப்படவேண்டிய 22 விமானங்களும், சென்னை வரவேண்டிய 5 விமானங்களும் தாமதம் புறப்பட்டு சென்றன. சிங்கப்பூர், கோலாலம்பூர், கொழும்பு, தோகா ஆகிய இடங்களுக்கு செல்லும் சர்வதேச விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டது. மழையின் காரணமாக பயணிகள், விமான ஊழியர்கள் வருகை தாமதமானதால் விமானங்கள் இயக்கமும் தாமதம்.

The post சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை காரணமாக 27 விமானங்கள் தாமதம்..!! appeared first on Dinakaran.

Related Stories: