புதுவை கவர்னர் மாளிகை முற்றுகை

புதுச்சேரி: தொழிலாளர் விரோத, மக்கள் விரோத ஒன்றிய அரசு வெளியேறக்கோரியும், புதுச்சேரி தேஜ கூட்டணி அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கவர்னர் மாளிகையை நேற்று முற்றுகையிட புதுச்சேரி மாநில தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் பேரணியாக மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டபடி சென்றனர்.

அவர்களை நேருவீதி- மிஷன் வீதி சந்திப்பில் கிழக்கு எஸ்பி சுவாதி சிங் தலைமையில் பெரியகடை போலீசார் பேரிகார்டுகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசுக்கும், போராட்டக்குழுவினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், மறியலை கைவிட்ட மறுத்த 30 பெண்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீசார், அனைவரையும் பிற்பகலில் விடுவிக்கப்பட்டனர்.

The post புதுவை கவர்னர் மாளிகை முற்றுகை appeared first on Dinakaran.

Related Stories: