பொங்கல் பண்டிகையையொட்டி 27.27லட்சம் வேட்டி-சேலைகள் விரைவில் வழங்க தாலுகா அலுவலகங்களில் இருப்பு வைப்பு வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில்

வேலூர், நவ.29: வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி 27.27 லட்சம் வேட்டி- சேலைகள் விரைவில் வழங்க தாலுகா அலுவலகங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும், தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி- சேலை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி-சேலைகள் வழங்கப்பட உள்ளது. இதனையொட்டி கடலூர் மாவட்டம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கைத்தறி ஆடைகளான வேட்டி-சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த வேட்டி-ேசலைகள் அனைத்தும் அரசு உத்தரவின்படி கோ-ஆப் டெக்ஸ் குடோன்களுக்கு அனுப்பி தரம் ஆய்வு செய்யப்பட்டு, அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் வேலூர் தாலுகாஅலுவலகத்தில் வேட்டி-சேலைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. வேலூர் தாலுகாவில் மட்டும் 99,975 வேட்டிகள், 1,02,837 சேலைகள், அணைக்கட்டு தாலுகாவில் 52,304 வேட்டிகள், 53,499 சேலைகள், காட்பாடி தாலுகாவில் 55,766 வேட்டிகள், 57,040 சேலைகள், குடியாத்தம் தாலுகாவில் 61,758 வேட்டிகள், 63,169 சேலைகள், பேர்ணாம்பட்டு தாலுகாவில் 30,045 வேட்டிகள், 30,730 சேலைகள், கே.வி.குப்பம் தாலுகாவில் 27,073 வேட்டிகள், 27,691 சேலைகள் அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் வேலூர் தாலுகா அலுவலகத்தில் பொங்கலுக்கு வழங்க வேட்டி- சேலைகள் நேற்று வந்து இறங்கியது.

அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3,20,768 வேட்டிகள், 3,21,443 சேலைகள் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க, தாலுகா அலுவலகங்கள் தோறும் வேட்டி-சேலைகள் இருப்பு வைக்கப்படுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 3,17,162 வேட்டிகள், 3,17,162 சேலைகள் வழங்கப்பட உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 7,88,985 குடும்ப அட்டை தாரர்களுக்கு வேட்டி-ேசலைகள் வழங்கப்பட உள்ளது. வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் மொத்தம் 27லட்சத்து 27ஆயிரத்து 407 பேருக்கு வேட்டி-சேலைகள் வழங்கப்பட உள்ளது. தற்போது மாவட்டங்கள் தோறும் தாலுகா அலுவலகங்களில் இருப்பு ைவக்கப்பட்டு அங்கிருந்து பொங்கலுக்கு முன்னதாக பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை ரேஷன் கடைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பொங்கல் பண்டிகையையொட்டி 27.27லட்சம் வேட்டி-சேலைகள் விரைவில் வழங்க தாலுகா அலுவலகங்களில் இருப்பு வைப்பு வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் appeared first on Dinakaran.

Related Stories: