மாணவர்களுக்கான 2 நாள் அரியவகை புத்தக கண்காட்சி பல்கலைக்கழக பதிவாளர் தொடங்கி வைத்தார் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பயிலும்

 

திருவலம், நவ.29: வேலூர் திருவள்ளுவர் பல்கலைகழகத்தில் பல்கலைகழகம் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான 2 நாள் அரியவகை புத்தக கண்காட்சியை பல்கலைக்கழக பதிவாளர் தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த சேர்க்காட்டில் உள்ள வேலூர் திருவள்ளுவர் பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 120க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 2 நாள் அரியவகை புத்தக கண்காட்சி நடத்த தமிழக அரசின் உயர்கல்விதுறை உத்தரவிட்டது. அதன்பேரில் பல்கலைக்கழக துணைவேந்தர் டி.ஆறுமுகம் கண்காட்சியை ஏற்பாடு செய்ய அறிவுறுத்தினார். இதையடுத்து 2 நாள் அரியவகை புத்தக கண்காட்சி தொடக்க விழா பல்கலைகழக கலையரங்கில் நேற்று காலை நடந்தது.

நிகழ்ச்சிக்கு பல்கலைகழக பதிவாளர் ஜெ.செந்தில்வேல்முருகன் தலைமை வகித்து புத்தக கண்காட்சியை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பல்கலைகழக மனிதவள மேம்பாட்டு மைய இயக்குநரும், மைய நூலக அலுவலருமான பி.விநாயமூர்த்தி வரவேற்றார். தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.பாபுஜனார்த்தனம், டீன் தண்டபாணி, பொருளியல்துறை தலைவர் ஜி.யோகானந்தம். பயோடெக் தலைவர் அ.ராஜசேகர், பேராசிரியர்கள் தினகரன், யுவராஜன், சித்ரா, பாமர,மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சென்னை, வேலூர் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த புத்தக வெளியீட்டாளர்கள், விற்பனையாளர்களின் அனைத்து துறை பாடப்பிரிவுகள் சம்பந்தப்பட்ட தகவல்கள் குறித்த பாட புத்தகங்கள் மற்றும் பொதுஅறிவு திறன் வளர்ப்பிற்கான புத்தகங்கள் என 22 ஆயிரம் அரியவகை புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்றது. முடிவில் பல்கலைகழக உதவிநூலகர் கண்ணன் நன்றி கூறினார். புத்தக கண்காட்சியில் பல்கலைகழகம் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ.மாணவிகள் கலந்து கொண்டு தங்களுக்கான பாடப்பிரிவுகள் குறித்த புத்தகங்களை வாங்கி சென்றனர்.

The post மாணவர்களுக்கான 2 நாள் அரியவகை புத்தக கண்காட்சி பல்கலைக்கழக பதிவாளர் தொடங்கி வைத்தார் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பயிலும் appeared first on Dinakaran.

Related Stories: