டிஜிட்டல் மோசடிகளை தடுக்க 70 லட்சம் மொபைல் எண்கள் முடக்கம்: ஒன்றிய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: டிஜிட்டல் மோசடிகளை தடுக்கும் வகையில், சந்தே கத்துக்குரிய 70 லட்சம் மொபைல் எண்களின் தொடர்பு தற்காலிகமாக துண்டிக்கப்பட்டதாக ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒன்றிய நிதிச் சேவைகள் செயலாளர் விவேக் ஜோஷி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், நிதி சைபர் பாதுகாப்பு மற்றும் அதிகரித்து வரும் டிஜிட்டல் கட்டண மோசடி தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “ டிஜிட்டல் மோசடிகளைத் தடுக்க, சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் காரணமாக 70 லட்சம் மொபைல் எண்களை அரசு தற்காலிகமாக முடக்கி உள்ளது. இது தொடர்பான அடுத்த கூட்டம் ஜனவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ஏமாறாமல் இருக்க சமூகத்தில் சைபர் மோசடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்,” என்று கூறினார்.

* அரசு வங்கி தெளிவுபடுத்தவில்லை
இம்மாத தொடக்கத்தில் பொதுத்துறை வங்கியான யூகோ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஐ.எம்.பி.எஸ் மூலம் ரூ.820 கோடி தவறாக வரவு வைக்கப்பட்டதாக தெரிய வந்தது. இதில் ரூ.649 கோடியை (சுமார் 79%) மட்டுமே மீட்க முடிந்தது. இந்த தொழில்நுட்ப கோளாறு மனித தவறால் ஏற்பட்டதா அல்லது ஹேக்கிங் முயற்சியால் ஏற்பட்டதா என்பதை அரசுக்கு சொந்தமான வங்கி இன்னும் தெளிவுபடுத்தவில்லை.

The post டிஜிட்டல் மோசடிகளை தடுக்க 70 லட்சம் மொபைல் எண்கள் முடக்கம்: ஒன்றிய அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: