உத்தரகாசியில் தேசிய நெடுஞ்சாலை பணியின்போது சுரங்கப்பாதை ஒன்று அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அந்த சுரங்கப்பாதையின் நடுவே மணல் சரிந்ததில் சுமார் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். கடந்த 12ம் தேதி நிகழ்ந்த இந்த சம்பவத்தால் உள்ளே சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் தற்போது வரை ஆரோக்கியமாக இருந்தாலும், அவர்கள் மீட்கப்படாதது மக்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்கப்பாதையில் இருந்து முதல் 18 தொழிலார்கள் வெளியே வர தொடங்கினர். ஒவ்வொருவராக அடுத்தடுத்து அடுத்தடுத்து வெளியே வர தொடங்கினர். இந்தியா இதுவரை கண்டிராத பணிக்கு எந்திரங்கள் மட்டுமின்றி மனித உழைப்பும் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியது. ராட்சத இயந்திரங்கள் பழுதானபோதும் மனித உழைப்பும் மீட்பு பனியின் இறுதிக்கட்டத்தை காய் கொடுத்தனர். கை கருவிகளைக் கொண்டு இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வெளியேறினர். அண்மையில் சுரங்கத்துக்குள் எண்டோஸ்க்கோப்பி கேமரா அனுப்பி தொழிலாளர்கள் நிலையை மீட்புக்குழு அறிந்தது.
The post உத்தரகாண்ட்: சில்க்யாரா சுரங்கப்பாதையில் இருந்து தொழிலார்கள் வெளியே வர தொடங்கினர். appeared first on Dinakaran.