தொழிலாளர்களை மீட்ட பின், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக தயார் நிலையில் ராணுவ விமானங்கள்!

உத்தரகாண்ட்: உத்தராகண்டில் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்ட பின், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக ராணுவ விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இயந்திரம் மூலமாக துளையிடும் முயற்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, மாற்று வழி ஏற்படுத்தப்பட்டு துளையிடப்பட்டு வந்தது.

இந்நிலையில், உத்தரகாண்டில் சுரங்கப்பாதை துளையிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க குழாய்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. குழாய்கள் அமைக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளே செல்லவுள்ளனர். சுரங்கத்தில் இருந்து மீட்கப்படும் 41 தொழிலாளர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க சுரங்கத்துக்குள்ளேயே தற்காலிக மருத்துவ படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது.

மீட்கப்படும் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க, ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தராகண்டில் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்ட பின், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ராணுவ விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சுரங்கத்திற்கு வெளியே தயார் நிலையில், ராணுவ விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

The post தொழிலாளர்களை மீட்ட பின், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக தயார் நிலையில் ராணுவ விமானங்கள்! appeared first on Dinakaran.

Related Stories: