உக்ரைன் நகரத்தை நோக்கி முன்னேறும் ரஷ்ய படைகள்: மீண்டும் தீவிரமடையும் போர்

ரஷ்யப் படைகள் உக்ரேனிய நகரத்தை நோக்கி எல்லாப் பக்கங்களிலிருந்தும் முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான யுத்தம் கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய நிலையில், இன்றும் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான தாக்குதலில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் நடந்து வந்த தாக்குதல் சற்று குறைந்துள்ள நிலையில், அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ஒரே இரவில் உக்ரனின் கிய்வ் நகரம் மீது 70க்கும் மேற்பட்ட ட்ரோன்களை கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. இது தான் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரைனில் ஏவப்பட்ட 75 ஆளில்லா விமானங்களில் 71 சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்று அவ்வப்போது, உக்ரனின் நகரம் மீது ரஷ்ய படைகள் மீண்டும் படையெடுக்க தொடங்கியுள்ளது. இதில், தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ரஷ்யப் படைகள் எல்லாப் பக்கங்களிலிருந்தும் உக்ரேனிய நகரத்தை நோக்கி முன்னேறி வருகின்றன என தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யப் படைகள் கிழக்கு உக்ரேனிய நகரமான அவ்திவ்காவைக் கைப்பற்றுவதற்கான முயற்சியை தீவிரப்படுத்தி வருகின்றன. பல வாரகால தாக்குதலுக்கு பிறகு அனைத்துப் பக்கங்களிலும் முன்னேற முயற்சிப்பதாக அந்நகரத்தின் உயர் அதிகாரி கூறியுள்ளார். ரஷ்ய துருப்புக்கள், 21 மாத யுத்தத்தில் கிழக்கு உக்ரைனின் டோன்பாஸ் பகுதிக்கு சென்றது, அக்டோபர் நடுப்பகுதியில் இருந்து அவ்திவ்கா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால், மீண்டும் ரஷ்யா – உக்ரைன் இடையிலான மோதல்களின் தீவிரம் அதிகரித்து வருகிறது என கூறப்படுகிறது.

The post உக்ரைன் நகரத்தை நோக்கி முன்னேறும் ரஷ்ய படைகள்: மீண்டும் தீவிரமடையும் போர் appeared first on Dinakaran.

Related Stories: