உத்தராகண்ட்: உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 பேரின் உறவினர்கள் தயார்நிலையில் இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 41 தொழிலாளர்களுக்கு தேவையான துணிகள், பொருட்களை தயாராக வைத்திருக்க உறவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுரங்கப்பாதையில் மீட்கப்படும் தொழிலாளர்கள் சின்யாலிசூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவுள்ளனர்.