வேலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது தாழ்வான இடங்களில் தேங்கிய நீர் அகற்றம் அதிகபட்சமாக பேரணாம்பட்டில் 22 மி.மீ பதிவு

வேலூர், நவ.28: வடகிழக்கு பருவமழையால் வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மிதமானது மழை பெய்தது. அதிகபட்சமாக பேரணாம்பட்டில் 22 மி.மீ மழை பதிவாகி உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களிலும், வட, தென் மற்றும் மத்திய மாவட்டங்களிலும், ஒரு சில வடமாவட்டங்களிலும் மழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழையே பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த வாரம் முதல் வேலூர் மாவட்டத்தில் விட்டுவிட்டு மழை பெய்தது. இந்நிலையில் வேலூரில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை மாவட்டத்தில் பல்ேவறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்தது.

மாநகராட்சி பகுதிகளில் பாதாளச்சாக்கடை திட்டத்தால் பல்வேறு இடங்கள் சேறும் சகதியாக மாறி உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். வேலூரில் முள்ளிப்பாளையம் கே.கே.நகர், கன்சால்பேட்டை, சமத் நகர், சைதாப்பேட்டை, சுண்ணாம்புக்கார தெரு, கொசப்பேட்டை உட்பட பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. நேற்று காலை மாநகராட்சி ஊழியர்கள் மின் மோட்டர்களை கொண்டு குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை உடனடியாக வெளியேற்றினர். நள்ளிரவில் பெய்த மலையின் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் மலையில் நனைந்து சென்றன. நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 149.60 மி.மீ மழை பதிவானது. அதிகபட்சமாக பேரணாம்பட்டில் 22.60 மி.மீ மழை பதிவானது. சராசரி மழை அளவு 11.51 மி.மீ.

மாவட்டம் முழுவதும் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்): வேலூர் கலெக்டர் அலுவலகம் 21.20, வேலூர் தாலுகா அலுவலகம்-17.20, அம்முண்டி சர்க்கரை ஆலை 14.60, காட்பாடி 9.60 பொன்னை 4.20, விரிஞ்சிபுரம் 18, ராஜாதோப்பு அணை- 16, மேலாலத்தூர் 8.80, குடியாத்தம் 9.40, ஒடுகத்தூர் 8.

The post வேலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது தாழ்வான இடங்களில் தேங்கிய நீர் அகற்றம் அதிகபட்சமாக பேரணாம்பட்டில் 22 மி.மீ பதிவு appeared first on Dinakaran.

Related Stories: